Q: மேல் வயிற்று வலி (Upper abdominal pain) / நெஞ்சு வலி (Chest pain) ஹாஸ் டிரபுள் (Gas trouble) / பசியின்மை (low appetite) / புளித்த ஏப்பம் (Belching) / உணவு உணவுக்குழாயில் திரும்புதல் (Regurgitation) .........இவை எல்லாம் எதை குறிக்கிறது ?
[குறிப்பு: இரைப்பை(stomach) என்று குறிப்பிட்டால் புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும் என்று கருதி வயிறு என்று இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.]
A: மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் (Symptoms) பெரும்பாலும் வயிற்று உபாதைகளால் வருவது தான். அதை நாம் பொதுவாக அல்சர்(Ulcer) அல்லது வயிற்று புண் என்று கூறுவோம். இதன் முதல் அறிகுறி பசியின்மை அல்லது வயிறு மந்தத்தன்மை சிலருக்கு மேல் வயிற்று வலி/ நெஞ்சு வலியுடன் வரும். சிலருக்கு புளித்த ஏப்பம் & செரிமானமின்மை கூட வரலாம்.
எப்படி உறுதிபடுத்துவது?
அல்சர் அல்லது வயிற்று புண்ணினால் வரும் வயிற்று வலி காரமில்லாத உணவு பண்டங்கள் தின்றால் உடனடியாக குறைந்து விடும், சில சமயம் முற்றிலும் சரியாகிவிடும். இல்லையேல் மருந்து கடையில் கிடைக்கும் பொதுவான அல்சருக்கான மருந்து ஒன்றை குடித்து பார்க்கலாம். சரியானவுடன் மருத்துவரை அணுகி முழு சிகிச்சை பெறவது நல்லது.
வேறு என்னென்ன வியாதிகள் இந்த அறிகுறிகளுடன் வரும்?
மிக மிக மிக அரிதாக வேறு சில வியாதிகளும் இந்த சில அறிகுறிகளுடன் வரலாம்.
1) கணையம்(Pancreas) வீக்கம் - பொதுவா குடி பழக்கம் உள்ளவருக்கு வருவதுண்டு.
2) கல்லீரல் (Liver) வீக்கம் - குடி பழக்கம், அதிக மாத்திரைகள்,கிருமிகள் (பக்டீரியா, வைரஸ் ), விசங்கள்(Poisons) etc...
3) மாரடைப்பு (Heart attack) - நெஞ்சு வலி தோள்பட்டைக்கு பரவும்.
4) நுரையீரல் (Lungs) மற்றும் சுவாச பாதை கோளாறுகள் பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலியுடன் இருக்கும்.
5) காயம் - நெஞ்சு மற்றும் மேல் வயிற்றில் அடி விழுதல்.
வயிற்று புண் (Gastric ulcer) / வயிற்று சிராய்ப்பு (Gastritis) வர முக்கிய காரணங்கள்:

- நேரம் கேட்ட நேரத்தில் சாப்பிடுவது!!!
- அதிக வலி மாத்திரை உட்கொள்வது
- குடி பழக்கம் (Alcohol)
- பாக்டீரியா தொற்று (Bacterial infection - H. Pylori)
- காரம் நிறைந்த உணவு
- மன அழுத்தம் (Stress)
- அமிலத்தன்மை அதிகம் கொண்ட உணவு (புளிப்பான உணவு, உ.ம்: ஆரஞ்சு, திராட்ஷை, எலும்பிச்சை மற்றும் புலி சாதம் ) - குறிப்பாக பசியுடன் இருக்கும் பொது சாப்பிடுதல்.
- மசாலா நிறைந்த உணவு மற்றும் காஃபி
- பலத்த காயம், தீக்காயம், அறுவை சிகிச்சை, தலைக்காயம்.
- மற்றும் பல......

அல்சரால் என்னென்ன விளைவுகள் வரலாம்?
- இரத்த கசிவு- புண்ணிலிருந்து (Gastro-intestinal bleeding)
- புற்று நோய் (Carcinoma stomach) - வெகு நாள் அல்சரால்.
- வெகு அரிதாக முன்சிருகுடலில்(Duodenum) ஓட்டை விழ வாய்ப்பும் அதனால் உடனடி உயிருக்கு ஆபத்தும் உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.
சரி என்னதான் தீர்வு (Treatment) ?
இரண்டு வகை வைத்தியம்
- மாத்திரை மருந்தில் குணம்
- அறுவை சிகிச்சை
1) மாத்திரை மற்றும் மருந்தில் குணம் :
பொதுவாக இரண்டு விதமான வேலைகளை செய்கிறது.
அ) ஒன்று வயிற்றின் அமிலத்தன்மையை (அசிடிட்டி - HCL) கட்டுபடுத்தி சரி செய்வது - இதனால் வயிறு மற்றும் குடலின் உள்பாகம் உள்ள சவ்வு படலம் (Mucous membrane) அமிலதிளிருந்து பாதுகாகபடுகிறது.
குறிப்பு: வயிற்று புண் பக்டீரியா தொற்றால் வந்திருந்தாள் அதற்கு அந்த பாக்டீரியாவையும் புன்னையும் சரி செய்ய ஒரு கூட்டு மருந்து ஒன்று கொடுக்கபடுகிறது, அதற்கு ஹெச். பைலோரி கிட்(H.Pylori kit) என்று பெயர்.
கீழ்கண்ட மாத்திரைகள் இதற்காக பொதுவாக பயன்படுத்தபடுகிறது:
ஒமேப்ரோசால், பாண்டப்ரசால், ராபேப்ரசால் (Omeprazole, pantaprazole, Rabeprazole)
ராநிடிடின் (Ranitidine)
ஆ) மற்றொன்று தற்காலிக உடனடி தீர்வு:
இது பெரும்பாலும் திரவ (Syrup) வடிவில் அளிக்கப்படுகிறது. இதை குடித்த உடன் அது உள்சென்று வயிறு மற்றும் குடலின் உள்சவ்வை (Mucous membrane) அமிலம் (aluminium & magnesium preparation ) மற்றும் உணவின் உருதல்களிளிருந்து வயிறை பாதுகாப்பதுடன் வலி மற்றும் எரிச்சலை(உணர்வு நீக்கல் மருந்து -oxethazaine ) உடனடியாக சரி செய்யும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
2) அறுவை சிகிச்சை மூலம்:
நாள்பட்ட ஆறாத புண்களுக்கு சில அறுவை சிகிச்சை முறைகள் முன்பு மிகவும் பிரசித்திபெற்றதாக இருந்தது. ஆனால, இப்பொழுது பாக்டீரியா தொற்றும் (H.Pylori) அதற்கான சிகிச்சை முறைகள் கண்டுபிடிப்பும் இந்த அறுவை சிகிச்சை முறைகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளன.
நாள்பட்ட ஆறாத புண்களுக்கு சில அறுவை சிகிச்சை முறைகள் முன்பு மிகவும் பிரசித்திபெற்றதாக இருந்தது. ஆனால, இப்பொழுது பாக்டீரியா தொற்றும் (H.Pylori) அதற்கான சிகிச்சை முறைகள் கண்டுபிடிப்பும் இந்த அறுவை சிகிச்சை முறைகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளன.
அ) இரைப்பையின் (வயிறு / Stomach) ஒரு பகுதி அதாவது புண் உள்ள பகுதியையோ அல்லது முழு வயிறோ ( தேவைக்கேற்ப ) அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்.
ஆ) வேகாடமி: (Vagotomy) நரம்பு இணைப்பை துண்டித்தல்.
அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க காரணமான வேகஸ் (Vegus) நரம்பு இணைப்பை இரைப்பையிலிருந்து துண்டித்தல்.
ஆ) வேகாடமி: (Vagotomy) நரம்பு இணைப்பை துண்டித்தல்.
அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க காரணமான வேகஸ் (Vegus) நரம்பு இணைப்பை இரைப்பையிலிருந்து துண்டித்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக